ஒம் சாந்தி
1. தன்னை ஆத்மா என்று உணர்ந்த பிறகே தான் அடைய வேன்டியதை அடைய ஒருவனால் முயற்சி செய்ய முடியும் என்று சிவ பாபா கூறுகின்றார்
2.மனதில் உண்மையும் தூய்மையும் இருந்தால்சிவ பாபா திருப்திஅடைகிறார் . .
3.யார் தன்னை இந்த தேகம் என்ற வீட்டில் விருந்தாளிகளாக உணர்கிறார்களோ அவர்கள்தான் மோகத்தை வென்றவர்கள் ஆவார்கள். .
4.சிந்திக்கும் சக்தியின் அனுபவி ஆனிர்கள் என்றால் ஞானசெல்வம் அதிகரித்து கொண்டேயிருக்கும்
5.சுயமாற்றத்தின்மூலமாகத்தான் உலகமாற்றத்தை கொண்டுவர முடியும் .
6.பரமாத்மாவின் அன்புதான் அமிர்தவேளையில் எழுப்பி விடக்கூடிய காலத்தின் மணி ஒலி ஆகும் .
7.அணைவரது மன ஆசைகளையும் பூர்த்தி செய்பவரே காமதேனு ஆவார்கள்..
8..யார் தக்க சமயத்தில் சகயோகி ஆகிறார்களோ அவர்களுக்கு ஒன்றுக்கு கோடிமடங்கு பலன் கிடைத்துவிடுகிறது
9.தியாகம் இல்லையேல் பாக்கியம் கிடைக்காது.




